Search This Blog

Thursday, 8 October 2020

கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு அறிவித்த அதிரடி சலுகை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படுமென சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இத்தொகை ஒரே முறை ஒட்டுமொத்தமாக வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் உண்டான மன அழுத்தம் மற்றும் ஆட்குறைப்பு ஆகியவை காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை சிங்கப்பூர் குடிமக்கள் தள்ளி வைத்து வருகின்றனர். அதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறித்து தகவல் எதையும் இன்னும் சிங்கப்பூர் அரசு வெளியிடவில்லை.

மகப்பேறு தொடர்பாக சிங்கப்பூர் அரசு ஏற்கனவே வழங்கி வரும் பல்வேறு சலுகைகளுடன் இதுவும் ஒரு கூடுதல் சலுகையாக இருக்கும்.

உலகிலேயே மிகவும் குறைவான குழந்தை பிறப்பு விகிதம் உள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் பிறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பல பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூரின் அண்டை நாடுகளான இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சிங்கப்பூரில் உள்ள நிலவரத்துக்கு நேர் எதிரான நிலை உள்ளது.

அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் முடக்க நிலை காலகட்டங்களில் கருவுற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

"குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் அந்த திட்டத்தை தள்ளி வைப்பதாக எங்களுக்கு பின்னூட்டம் கிடைத்தது," என்று சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் திங்களன்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய திட்டங்களின் அடிப்படையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது.l

Tuesday, 5 November 2019

கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி : திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரைச் சேர்ந்தவர் அப்பு (24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவருக்கும், இவரது உறவினரான பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த ஸ்டெஃபி என்கின்ற மெர்சிக்கும், வரும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்தவாரம் நிச்சயதார்த்தம் முடிந்தது.  இந்நிலையில், இவர்கள் இருவரும், வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள், கண்டிகை கிராமத்தில் உள்ள, ஒரு விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது கால் தவறி, கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில், மோதிய மெர்சி கிணற்று நீரில் மூழ்கினார். அவரை பிடிக்கச் சென்றபோது அப்புவும் கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் இருந்து இருவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அங்கே வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்த சடகோபன் என்பவர், இருவரையும் காப்பாற்ற முயற்சித்தார்.

ஆனால் பெரும் பேராட்டத்திற்குப் பின்னர் அப்புவை மட்டும் காப்பற்றி, பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த ஆவடி தீயணைப்பு படையினர், சுமார் 1 மணி நேரம் போராடி மெர்சியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, 28 October 2019

பிகில் படத்தின் இந்த மாஸ் சீன் கூட அட்டர் காப்பியா..? - வீடியோ வெளியிட்டு அட்லியை விளாசும் ரசிகர்கள்

பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. 

முதல் மூன்று நாட்கள் 80%அரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சியாக ஓடியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. 

இந்த படத்தின் இயக்குனர் அட்லி மீது எப்போதும் ஒரு புகார் இருந்து கொண்டே இருக்கும். அது தான் காப்பி கேட் மன்னன் அட்லி என்பது. அவருடைய அனைத்து படங்களிலும் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கலாம். 

அந்த வகையில், பிகில் படத்திலும் அப்படி ஒரு மாஸ் காட்சியையும் சுட்டு தான் வைத்துள்ளார் அட்லி.

Saturday, 26 October 2019

நடிகர் விஜய் கண்கலங்கி பேசிய ஒரு சில வார்த்தைகள். என்ன சொன்னாரு தெரியுமா ?

நடிகர் விஜய் கண்கலங்கி பேசிய ஒரு சில வார்த்தைகள் இதோ வீடியோ click panni parunga

திருச்சி: நாமக்கல் வெங்கடேஷ் குழுவினர் உருவாக்கிய கருவியை முன்பே பயன்படுத்தியிருந்தால் ஒருவேளை சுஜீத்தை இந்நேரம் பத்திரமாக மீட்டிருக்க முடியுமோ என்ற ஆதங்கமும், கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் 70 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளான். அவனது நிலைமை என்ன என்று தெரியவில்லை.
நேற்று மாலை 5. 40 மணியளவில் சிறுவன் போர்வெல் கிணற்றில் விழுந்தான். விழுந்த உடனேயே தகவல் கிடைத்து மீட்புப் படையினர் வந்து விட்டனர். தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து விட்டனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் வந்து விட்டனர். மாவட்ட கலெக்டர்,எஸ்பி என சகலரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

தெம்பு கிடைத்தது

போர்வெல்லில் அப்போது கிட்டத்தட்ட 26 அடி ஆழத்தில் விழுந்திருந்தான் சுஜித். அவனது குரலை வெளியில் இருந்தோர் தெளிவாக கேட்க முடிந்தது. மேலிருந்து பேசியோர் பேச்சும் சிறுவனுக்கு கேட்டு அதற்கு அவன் ரியாக்ஷனும் கொடுத்தான். இதனால் அனைவருக்கும் தெம்பு கிடைத்தது. மீட்டு விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

மணிகண்டன்

முதலில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த கருவி மூலம் மீட்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் உருவாக்கிய ரோபோட் கருவியை சிறுவன் விழுந்திருந்த இடம் வரை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனின் கைகளில் கயிற்றைப் போட்டுக் கட்டி மேலேதூக்கி பின்னர் ரோபோட் கருவி மூலம் மீட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

கயிறுகள்

இதையடுத்து சிறுவனின் கைககளில் கயிறை மாட்டும் முயற்சிகள் தொடங்கின. ஒரு கையில் மட்டுமே கயிறை கட்ட முடிந்தது. 2வது கையில் கட்டும் முயற்சிகள் அடுத்தடுத்து 3 முறை தோல்வி அடைந்தன. இதற்கே கிட்டத்தட்ட 5 மணி நேரம் வரை ஆகி விட்டது. இந்த நிலையில் ஏற்கனவே கட்டப்பட்ட கையிலிருந்தும் கயிறு ஈரம் காரணமாக கழன்று விட்டது. இதனால் மணிகண்டன் டீமின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

பள்ளம்

இதற்கிடையே பக்கவாட்டில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி அதன் மூலமாக மீட்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் குறிப்பிட்ட ஆழம் வரை தோண்டிய பின்னர் பாறை வந்ததால் அந்த முயற்சியும் நின்று போனது. இப்படியாக மாறி மாறி என்னென்னவோ செய்து பார்த்தனர். இந்த நிலையில்தான் வெங்கடேஷ் என்பவர் உருவாக்கிய கருவியைக் கொண்டு வந்தனர்.

மீட்பு கருவி

இது வெங்கடேஷ் என்பவர் தலைமையில் உருவாக்கிய மீட்புக் கருவி. இதைப் பரிசோதித்து சென்னை ஐஐடி அங்கீகாரம் கொடுத்துள்ளது. இது ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் ஆகும். அதை அப்படியே வித்தியாசமாக மீட்புக் கருவியாக மாற்றியுள்ளனர். அதன்படி ஆக்சிஜன் சிலிண்டருடன், ஒரு கேமரா இணைக்கப்பட்டுள்ளது. மைக் இணைக்கப்பட்டுள்ளது. அது போக குழந்தைகளை அப்படியே தூக்கிப் பிடித்து மேலே கொண்டு வர வசதியாக ஒரு ஹூக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

பெரும் சோகம்

மேலிருந்து இதை கீழே இறக்கும்போது உள்ளே உள்ள நிலவரத்தை வெளியில் இருந்து பார்க்க முடியும். அதற்கேற்ப செயல்பட முடியும்.. நேற்றைய மீட்பு சாதனங்களிலேயே இதுதான் சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த கருவியை நேற்று பயன்படுத்தியபோது 26 அடி ஆழத்தில் சிறுவன் இல்லை. அப்போதே அவன் வெகுவாக கீழே இறங்கி விட்டான். இதுதான் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

ஆதங்கம் - ஆவேசம்

இந்த கருவியை முன்கூட்டியே பயன்படுத்தியிருந்தால், அதாவது 26 அடி ஆழத்தில் சற்று பாதுகாப்பான சூழலில் சிறுவன் இருந்தபோதே பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் சுஜித்தை மீட்டுக்கொண்டு வந்திருக்கலாமோ என்ற ஆதங்கமும், கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டியது மிகமிக அவசியம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொறுத்திருப்போம்.. சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திருப்போம்.

இந்த கருவியை முன்பே பயன்படுத்தியிருந்தால்.. இந்நேரம் சுஜித் வெளியில் வந்திருக்கலாமோ?

Monday, 21 October 2019

#mrocsoru #marina Marina beach vlog 2 episode by #Mr oc soru

Marina va suthi parka neraiya iruku neenga comments pannuga naa yethelaam miss pannitenu

#marinabeach #sweetcorn #masalacorn #sweet #foodpanda #innaikuyannasamayal #annasamathi  #irfanview #sweetpizza #foodreview ,#sundariakka

#mrocsoru smart bike suggest pulsar Rs200 by #Mr oc soru

I like to upload adventure vlogging ride and food review and I was suggested Bajaj pulsar RS200
Pulsar RS200 Vs FZ25 race, FZ25 vs PULSAR RS200, Yamaha FZ 25 VS Pulsar RS200, Yamaha FZ25 VS Pulsar RS200 drag race, Pulsar RS200 VS FZ25 top end race, FZ 25 test, Fz25 vs Pulsar NS200, FZ25 VS KTM RC 200, KTM DUke 200 VS FZ25, Pulsar VS FZ25, NINJa, Kawasaki, Honda CBR 250 VS PUlsar RS 200, FZ25 VS Cbr 250, CBR 250 VS FZ 250, CBR 250 VS Duke 250, motorbeam, PowerDrift, Odmag, Pulsar RS200 2017, Yamaha FZ25

#pulsar #Rs200 #riding vlogger #pulsar ns #pulsar150cc #racer #bikeride #smartbike